இந்தியா, பிப்ரவரி 8 -- டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பாஜக வேட்பாளர் பர்வேஷ் வர்மாவிடம் வெற்றி வாய்ப்பை இழந்து உள்ளார். டெல்லி முதலமைச்சர் பதவிக்கு இவரது பெயரையும் பாஜக பரிசீலிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தேர்தல் ஆணைய வலைத்தளம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, 12 சுற்று வாக்குகள் எண்ணப்பட்டு உள்ள நிலையில், 28238 வாக்குகளை பர்வேஷ் வர்மா பெற்று உள்ளார். அரவிந்த் கெஜ்ரிவால் 24449 வாக்குகளை பெற்று உள்ளார். இருவருக்கும் இடையே உள்ள வாக்கு வித்தியாசம் 3789 ஆக உள்ளது. காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் சந்தீப் தீக்‌ஷித் 4217 வாக்குகளை பெற்று உள்ளார்.

நவம்பர் 7, 1977 இல் பிறந்த பர்வேஷ் சாஹிப் சிங் வர்மா அரசியல் குடும்ப பின்னணியைச் சேர்ந்தவர். ஆர்.கே. புரத்தில் உள்ள டெல்லி பப்ளிக் பள்ளியில் பள்ளிக்கல்வியையும், டெல்லி பல்கல...