Chennai, மே 4 -- தமிழ் சினிமாவில் அறிமுக இயக்குநர்களின் படங்கள் சிறப்பான வெற்றியை பெற்று வரும் காலமாக மாறி வருகிறது. தமிழில் வரும் பல தரமான அறிமுக இயக்குநர்களால் தமிழ் சினிமாவும் உலக அளவிற்கு உயர்ந்து வருகிறது. தற்போது அந்த வரிசையில் டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படமும் இணைந்து உள்ளது.

24 வயது அறிமுக இயக்குநர் அபிஷன் விஜேத் இயக்கி வெளியாகியுள்ள டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் விமர்சன ரீதியாக பலரது பாராட்டைப் பெற்றுள்ளது. திரையரங்கு எண்ணிக்கையும் இதனால் அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது. இப்படத்தில் சசிகுமார், சிம்ரன், யோகி பாபு, ரமேஷ் திலக், குமரவேல் மற்றும் எம்.எஸ். பாஸ்கர் உட்படப் பலர் நடித்துள்ளனர். இந்த நிலையில் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் மூன்றாவது நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் படிக்க|: தமிழ் சினிமா ரீவைண்ட்: அடல்ட் திகில் காமெடி...