சென்னை,மதுரை,திருச்சி, ஏப்ரல் 21 -- TV ராசிபலனை நம்பலாமா? இப்போதெல்லாம் காலை நேரங்களில் வீடுகளில் கந்தசஷ்டி கவசம் கேட்கிறமோ இல்லையோ, ராசிபலன் ஓடுவதை கேட்க முடிகிறது. காலை 6 மணி முதல் 8 மணி வரை எந்த டிவி சேனலை திருப்பினாலும் ராசிபலன் ஒளிபரப்பாகின்றன. "கும்ப ராசி நேயர்களே இன்றைய நாள் உங்கள் வாழ்க்கையில் பொன்னான நாள், மகாலட்சுமி வீட்டு காலிங் பெல்லை அடிக்கப்போகிறாள். சீலிங் பீய்த்து கொண்டு கொட்டப்போகிறது" ரேஞ்சுக்கு பில்டப் கொடுப்பார்கள். ஆனால் அது நடந்ததா? என்பது மில்லியன் டாலர் கேள்வி.

மேலும் படிக்க | அட்சய திருதியை 2025: நலம் பெற 12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய தானம்.. வாங்க வேண்டிய பொருள்கள் எவை?

டிவி ராசிபலனை பார்த்துவிட்டு வெளியே செல்லும் பெரும்பாலானவர்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சும். காலெண்டரில் தேதி கிழிக்கும் போதும் நம்முடைய ராசிக...