இந்தியா, மே 11 -- இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தம்: இந்தியாவும் பாகிஸ்தானும் நிலத்திலும் வான்வழியிலும் துப்பாக்கிச் சூடு மற்றும் ராணுவ நடவடிக்கையை நிறுத்த முடிவு செய்துள்ளதாக வெளியுறவுச் செயலாளர் விக்ரிம் மிஸ்ரி மே 10ஆம் தேதி அன்று தெரிவித்தார்.

"பாகிஸ்தானின் டிஜிஎம்ஓ (ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல்) மே 10 (நேற்று) பிற்பகல் 3.35 மணிக்கு இந்திய டிஜிஎம்ஓவை அழைத்தார். இரு தரப்பினரும் நிலம், வான்வழி மற்றும் கடல்வழியில் அனைத்து துப்பாக்கிச் சூடு மற்றும் ராணுவ நடவடிக்கைகளையும் நிறுத்துவதாக ஒப்புக் கொள்ளப்பட்டது," என்று வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறினார்.

போர் நிறுத்த ஒப்பந்தத்தை எட்டுவதற்காக இந்தியா மற்றும் பாகிஸ்தானின் டிஜிஎம்ஓக்களுக்கு இடையே தொடர்பு ஏற்படுத்தப்பட்ட பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், போ...