இந்தியா, மார்ச் 20 -- முதுகெலும்பில்லாத கோழைகள் பாஜகவிற்கு அடிபணியலாம் ஒருகாலமும் திராவிட மாடல் அரசைத் துரும்பளவு கூட அசைத்துப் பார்க்க முடியாது என சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமலாக்கத் துறையின் மிரட்டல் உருட்டல்களுக்கெல்லாம் தமிழ்நாடு அஞ்சாது, என்பதை அறியாத ஆதிக்கவாதிகளின் அராஜக நடவடிக்கைக்கு எதிராகத் தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் அமலாக்கத்துறைக்குக் குட்டு வைத்திருக்கிறது உயர் நீதிமன்றம். அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கிலேயே உச்ச நீதிமன்றத்தால் கடும் கண்டனத்தை எதிர்கொண்ட அமலாக்கத்துறை தற்போது மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு ஆளாகியிருக்கிறது.

தமிழ்நாட்டின் போர்க்குணத்தை அரசியல் ரீதியாகவும், கருத்தியல் ரீதியாகவும் எதிர்கொள்ளத் திராணி இல்லாத பாஜக...