இந்தியா, ஏப்ரல் 22 -- டாஸ்மாக் கடைகளில் ஒரு மது பாட்டில்களுக்கு கூடுதலாக 10 ரூபாய் வசூல் செய்வதன் மூலம் ஆண்டுக்கு 5400 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்து உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் டாஸ்மாக் முறைகேடு குறித்து பேச வாய்ப்பு மறுக்கப்படுவதாக கூறி அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.

டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோடி முறைகேடு நடந்ததாக எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். சட்டப்பேரவையில் இவ்விவகாரத்தை எழுப்ப முயன்றபோது, பேச்சுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும், இது ஜனநாயகப் படுகொலை எனவும் அவர் கடுமையாக விமர்சித்தார்....