இந்தியா, ஏப்ரல் 25 -- தமிழகம் முழுவதும் கடந்த மாதம் சிவா டிஸ்டிலரீஸ் நிறுவனங்களுக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையின் முடிவில், டாஸ்மாக்கிற்கு மதுபான சப்ளை உள்ளிட்டவற்றில் ரூ.1000 கோடி வரை அந்நிறுவனம் முறைகேடு செய்திருப்பதாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் சிவா டிஸ்டிலரீஸ் அதிகாரிகளிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

டாஸ்மாக்கில் ரூ.1000 கோடிக்கு மேல் முறைகேடு நடந்துள்ளது என்றும் மதுபான கொள்முதல் மூலம் தனியார் நிறுவனங்கள் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளன; திட்டுமிட்டு செலவுகளை அதிகப்படுத்தியும் விற்பனை புள்ளிவிவரங்களை உயர்த்தியும் முறைகேடு நடந்துள்ளது என்றும்' டாஸ்மாக் தலைமை அலுவலகம் மற்றும் மதுபான ஆலைகளில் கடந்த மார்ச் மாதம் நடந்த சோதனை தொடர்பாக அமலாக்கத்துறை (ED) பரப...