இந்தியா, மார்ச் 8 -- சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் 3ஆவது நாளாக அமலாக்கத்துறை ரெய்டு நடத்தி வரும் நிலையில் ரெய்டு முழுமையாக நடந்து முடிந்த பிறகு பதில் சொல்வதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்து உள்ளார்.

எழும்பூரில் உள்ள தாளமுத்து நடராசன் மாளிகையில் 4 மற்றும் 5வது தளங்களில் செயல்படும் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மார்ச் 6ஆம் தேதி முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

டாஸ்மாக் நிறுவனத்திற்கு மதுவகைகளை விநியோகம் செய்யும், திமுக எம்.பி ஜெகத்ரட்சகனின் குடும்பத்திற்கு தொடர்புடைய அக்கார்ட் டிஸ்லரிஸ் அண்ட் பிவெரெஜஸ் பிரைவெட் லிமிடெட், எஸ்.என்.ஜே குழுமம், கால்ஸ் குழுமம், எம்.ஜி.எம் குழுமம் ஆகிய மதுபான ஆலைகளின் தலைமை அலுவலகங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியது.

மேலும் மின்சாரம், மதுவிலக்கு மற்ற...