இந்தியா, மே 26 -- மிஷன்: இம்பாசிபிள் - தி ஃபைனல் ரெக்கனிங் திரைப்படமானது மிஷன் இம்பாசிபிள் சீரிஸின் கடைசி பாகமாக இருக்குமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. ஆனால், படக்குழு இன்னும் அது குறித்து எந்த வித அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.

இது குறித்து மிஷன் இம்பாசிபுள் சீரிஸில் எரிகா ஸ்லோனேவாக நடிக்கும் ஏஞ்சலா பாசெட், "மிஸ்டர் குரூஸை நீங்கள் ஒரு போதும் வெளியே அனுப்பவோ அல்லது கீழே இழுக்கவோ முடியாது. அவர் எப்போதும் ஒரு அற்புதமான சாகசத்திற்கும், பார்வையாளர்களுக்கு அவர்கள் ஏங்குவதைக் கொடுப்பதற்கும் தயாராக இருக்கிறார். அதனால் இந்த சீரிஸ் முடியும் என்று நான் ஒருபோதும் கருத மாட்டேன்.

மூன்றாவது பாகத்தில் இருந்து தொழில்நுட்ப நிபுணர் பென்ஜி டன்னாக நடித்த சைமன் பெக் பேசும் போது, 'ஒருபோதும் அப்படி சொல்ல வேண்டாம், நான் என்ன சொல்...