இந்தியா, மே 7 -- பிரதமரை பாராட்டிய ரஜினி, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மரணம் உள்ளிட்ட முக்கிய செய்திகளை இன்றைய டாப் 10 நியூஸ் தொகுப்பில் சுருக்கமாக காணலாம்.

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் நடவடிக்கைக்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர், "போராளியின் சண்டை தொடங்கியுள்ளது. இலக்கை அடையும் வரை நிறுத்த வேண்டாம். ஒட்டுமொத்த நாடும் பிரதமர் மோடியுடன் உள்ளது." என்று நடிகர் ரஜினிகாந்த் பதிவிட்டுள்ளார்.

பஹல்காம் தாக்குதலுக்கு இந்திய முப்படைகள் பதிலடி கொடுத்து இருப்பதை முதல்வர் ஸ்டாலின் வரவேற்றுள்ளார்.எக்ஸ் பக்க பதிவில் அவர், பயங்கரவாதத்திற்கு எதிராக இந்திய ராணுவத்துடன் தமிழ்நாடு துணை நிற்கும் என கூறியுள்ளார். மேலும், நமது ராணுவத்துடன், நமது தேசத்திற்காக. தமிழ்நாடு உறுதியாக நிற்கிறது எனவும் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

சென்...