இந்தியா, மார்ச் 3 -- தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று தொடக்கம். மொத்தம் 8.21 லட்சம் மாணவ, மாணவிகள் பொதுத்தேர்வு எழுதுகின்றனர். இத்தேர்வுக்கென தமிழ்நாடு முழுவதும் 3,316 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பொதுத்தேர்வு எழுத உள்ள தம்பிகள் மற்றும் தங்கைகளுக்கு வாழ்த்துகள். பொதுத்தேர்வினை துணிவுடன், தன்னம்பிக்கையுடன் எதிர்கொண்டு, தேர்வில் வெற்று பெற்று, வாழ்வில் சிகரம் தொட வாழ்த்துகிறேன் என தவெக தலைவர் விஜய் வாழ்த்து.

ஆடு நனைகிறதே என அழும் ஓநாய் கதையை போல் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுகிறார். இருமொழிக் கொள்கையால் தென்னிந்திய மொழிகளை படிக்கிற வாய்ப்பு இல்லை என்கிறார். பாஜக ஆளும் மாநிலங்களான உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், பிகாரில் எத்தனை வட இந்திய மொழிகள் கற்றுத் தரப்படுகின்றன என முதலமைச்சர் மு.க.ஸ்...