இந்தியா, மார்ச் 23 -- தமிழ்நாட்டில் இன்று காலை வரை நடந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

தமிழ்நாட்டில் இன்று காலை 11 மணி வரை திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, விழுப்புரம், திருவண்ணாமலை, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

மதுரை மாவட்டம் மொட்டமலை பகுதிகளில் ரவுடி காளீஸ்வரன் மர்மநபர்களால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். நேற்றிரவு வீட்டின் வெளியே வந்த காளீஸ்வரனை 3 பைக்குகளில் வந்த மர்ம நபர்கள் வெட்டிக் கொன்றனர்.

ரம்ஜான் பண்டிகையையொட்டி மார்ச் 27. 28. 32 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. தாம்பரம் - கன்னியகுமரி, தாம்பரம் - திருச்சிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. சென்னை செண்ட்ரல் - பெங்களூரு இடைய...