இந்தியா, மார்ச் 28 -- தமிழ்நாட்டில் இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று தொடங்கி ஏப்ரல் 15ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. தமிழ்நாட்டில் இத்தேர்வை 9.13 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். இதற்காக 4,113 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் அரங்கில் இன்று நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தவெக கட்சியின் பொதுக்குழு இன்று நடைபெறும் நிலையில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்தை வருங்கால முதலமைச்சர் என சென்னை புறநகர் மாவட்ட செயலாளர் ஈ.சி.ஆர்.சரவணன் பெயரில் போஸ்டர் ஒட்டப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க:- EP...