இந்தியா, மார்ச் 11 -- தமிழ்நாட்டில் இன்று காலை வரை நடந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

நாடாளுமன்றத்தில் கல்வி தொடர்பான கேள்வி பதிலின்போது, தமிழ்நாட்டு மக்களை நாகரிகமற்றவர்கள் எனப் பேசிய ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு, தமிழக எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர். அதன்பின், நேற்று தனது பேச்சை வாபஸ் பெற்றிருந்தார், தர்மேந்திர பிரதான். இந்நிலையில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பேச்சு மக்களவையின் அவைக் குறிப்பிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

மன்னர் என எண்ணிக்கொண்டு மத்திய அமைச்சர் பிரதான் ஆணவத்துடன் பேசுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்து இருக்கிறார். பிரதானுக்கு நாவடக்கம் தேவை எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே ரூ.80,000 பணத்திற்காக 2 சிறுவர்களை வாத்து பண்ணையி...