இந்தியா, மார்ச் 8 -- தமிழ்நாட்டில் இன்று காலை வரை நடந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

உலக மகளிர் தினத்தையொட்டி நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் விழாவில் பெண் ஓட்டுநர்களுக்கு 250 பிங்க் ஆட்டோக்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.

எந்த ரூபத்திலும் மேகதாது அணை கட்டப்பட மாட்டாது. தமிழக அரசை மீறி மத்திய அரசால் ஒப்புதல் வழங்க முடியாது. சட்டம் நம் பக்கம் உள்ளது என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேட்டி.

நாங்கள் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல; ஆங்கிலமும், தமிழும் படித்து எங்களது பிள்ளைகள் சிறப்பான முறையில் இத்தனை ஆண்டு காலம் சாதனை படைத்து வருகின்றனர். கூகுள் நிறுவனத் தலைவரே இருமொழிதான் படித்து உள்ளார். வடநாட்டவர்கள் ஏன் மும்மொழி படிப்பதில்லை, நாங்கள் மட்டும் மும்மொழி படிக்க வேண்டுமா என திமுக எம்.பி தயாநிதி மாறன் கேள்வி. ...