இந்தியா, பிப்ரவரி 23 -- தமிழ்நாட்டில் இன்று காலை வரை நடைபெற்ற முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

தமிழக காவல்துறையில் பாலியல் புகார்களை விசாரிக்கும் விசாகா கமிட்டி மறுசீரமைக்கப்பட்டு புதிய உறுப்பினர்களை நியமித்து டிஜிபி சங்கர் இவால் உத்தரவு. ஐபிஎஸ் அதிகாரி சீமா அகர்வால் விசாகா கமிட்டியின் தலைவராக தொடர்வார் என அறிவிப்பு.

தருமபுரி கிழக்கு மாவட்ட செயலாளராக இருந்த தடங்கம் சுப்பிரமணியம் நீக்கம். அவருக்கு பதிலாக பி.தர்ம செல்வன் மாவட்ட பொறுப்பாளராக நியமனம்.

ராமேஸ்வரத்தில் இருந்து கடலுக்கு சென்ற மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்தது. மன்னார் கடற்பரப்பு அருகே மீன் பிடித்தபோது எல்லை தாண்டியதாக கூறி இலங்கை கடற்படை கைது செய்தது.

மேலும் படிக்க:- '10,000 கோடி கொடுத்தாலும் தேசியக் கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம்!' முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச...