இந்தியா, பிப்ரவரி 28 -- தமிழ்நாட்டில் இன்று காலை வரை நடைபெற்ற முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் தமிழ்நாடு போராடும்; தமிழ்நாடு வெல்லும். நாட்டின் நலனுக்காக மக்கள் தொகையை கட்டுப்படுத்திய தமிழ்நாட்டை வஞ்சிக்க கூடாது. நாட்டின் நலனுக்காக யாருக்கும் எதையும் விட்டுக் கொடுக்கமாட்டோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை.

ஆதவ் அர்ஜூனாவின் அரசியல் செயல்பாடுகளை எங்கள் குடும்பத்துடன் இணைத்து பார்க்க வேண்டாம் என ஆதவ் அர்ஜூனாவின் மனைவியும், பிரபல தொழிலதிபர் மார்ட்டினின் மகளுமான டெய்சி சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு உள்ளார்.

நடிகை அளித்த புகாரில் சீமான் வீட்டில் ஒட்டிய சம்மனை கிழித்து காவலர்களை தடுத்த விவகாரத்தில் சீமான் வீட்டு காவலாளி மற்றும் உதவியாளருக்கு வரும் 13ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல்.

தமிழ்நாட்டில் அரிசி விலை...