இந்தியா, மார்ச் 29 -- தமிழ்நாட்டில் இன்றைய நாளுக்கான முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

100 நாள் வேலைத்திட்ட நிதி ரூ.4034 கோடி வழங்க மறுக்கும் மத்திய அரசை கண்டித்து திமுக சார்பில் இன்று அனைத்து ஒன்றியங்களிலும் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

உங்களுக்கு 'வேண்டப்பட்ட' கார்ப்பரேட்டுக்கள் என்றால் பல லட்சம் கோடி கடனைக் கூட ஒரே கையெழுத்தில் தள்ளுபடி செய்கிறீர்களே? வேகாத வெயியில் உடலை வருத்தி வியர்வை சிந்தி உழைத்த ஏழைகளின் சம்பள பணத்தை விடுவிக்க மட்டும் ஏன் பணமில்லை? பணமில்லையா? அல்லது மனமில்லைய என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி. 100 நாள் வேலை திட்டம் பாஜகவுக்கு பிடிக்கவில்லை என்றும் விமர்சனம்.

அதிமுக - பாஜக கூட்டணி அமையுமா என்ற கேள்விக்கு "கூட்டணி தொடர்பாக ஆலோசனை நடந்து வருகிறது. உரிய நேரத்தில் அறிவிப்பை வெளியிடுவோம்" என...