இந்தியா, மார்ச் 15 -- தமிழ்நாட்டின் முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட்டை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தாக்கல் செய்ய உள்ளார்.

வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதையொட்டி முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் மரியாதை செலுத்தினார்.

தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத் தொடர், மானியக் கோரிக்கை விவாதங்கள் அனைத்தும் ஏப்ரல் 30ஆம் தேதி வரை நடைபெறும் என்றும், சபாநாயகர் மீது அதிமுகவினர் அளித்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் வரும் திங்கட்கிழமை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் எனவும் சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு.

தமிழ்நாடு பட்ஜெட் அறிவிப்பில் எங்கள் எதிர்பார்ப்புகள் ஏமாற்றமானது. எங்கள் கோரிக்கைகள் கேள்விக்குறியானது என ஜாக்டோ-ஜ...