இந்தியா, மார்ச் 7 -- தமிழ்நாட்டில் இன்று காலை வரை நடந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

திமுக எந்த மொழிக்கும் எதிரியல்ல; வலிந்து திணிக்கப்படும் மொழிகளையே எதிர்க்கிறது. இந்தி ஆதிக்கத்தில் இருந்து இந்திய மொழிகளை காப்பது திராவிட இயக்கத்தின் கொள்கைதான். தாய் மொழியை காக்க தமிழகம் போட்டுத்தந்த பாதையே பல மாநிலங்கள் பின்பற்றுகின்றன. தமிழ் உட்பட 22 மொழிகளையும் இந்திய ஒன்றியத்தின் ஆட்சி மொழியாக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை.

ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலத்தில் அமைந்து உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படையின் 56ஆவது ஆண்டு விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்று உள்ளார். மத்திய தொழில் பாதுகாப்பு படை தின அணிவகுப்பு மரியாதையையும் அமித்ஷா ஏற்றுக் கொண்டார்.

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இ...