இந்தியா, மார்ச் 1 -- தமிழ்நாட்டில் இன்று காலை வரை நடந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 72ஆவது பிறந்தநாளையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார். "இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம்! அண்ணாவின் பாதையில் என்றும் பயணிப்போம்" என முதலமைச்சர் முழக்கம்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் பெற வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்து.

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அரசுப்பள்ளியில் 2025-26ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

நடிகை அளித்த பாலியல் புகார் தொடர்பான விசாரணைக்கு வளரசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜரான நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கா...