இந்தியா, மார்ச் 31 -- தமிழ்நாட்டில் இன்று காலை வரையிலான முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

பிறை தென்பட்டதால் தமிழ்நாடு முழுவதும் இன்று ரமலான் பண்டிகை உற்சாக கொண்டாட்டம். ஷவ்வால் மாத பிறை தென்பட்ட நிலையில் இஸ்லாமியர்கள் புத்தாண்டை அணிந்து சிறப்புத் தொழுகை.

தென் மாநிலங்கள் முழுவதும் கடந்த 4 நாட்களாக நீடித்து வந்த எல்.பி.ஜி டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது. எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டு உள்ள புதிய ஒப்பந்தத்தில் உள்ள கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றதை அடுத்து போராட்டம் வாபஸ்.

பாஜக பல்வேறு வடிவங்களில் எதிரிகளை உருவாக்கி நாடகங்களை நடத்துவதாக முதலமைச்சர் குற்றச்சாட்டு. 2026 தேர்தலில் திமுக வெல்லும் என மு.க.ஸ்டாலின் நம்பிக்கை.

திமுக கூட்டணி விவகாரத்தில் அமித்ஷா முடிவே இறுதி என அண்ணாமலை திட்டவட்டம். பாஜகவில்...