இந்தியா, மார்ச் 27 -- தமிழ்நாட்டில் இன்றைய நாளுக்கான முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

வெறுப்பு குறித்து உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம். யோகி ஆதித்யநாத் பாடம் எடுப்பது அரசியலின் உச்சகட்ட அவல நகைச்சுவை, தமிழ்நாட்டின் குரல் தேசிய அளவில் எதிரொலிப்பதால் பாஜக கலக்கமடைந்து உள்ளது. அது பாஜக தலைவர்களின் பேட்டிகளை பார்த்தாலே தெரிகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று வந்த நிலையில், இன்று காலை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை டெல்லி புறப்பட்டார்.

நெல்லையில் மறைந்த முன்னாள் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ கருப்பசாமி பாண்டியன் உடலுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் அஞ்சலி செலுத்தினார்.

ஸ்கார்ட்லாந்து யார்டுக்கு இணையான காவல்துறையை வைத்து, ...