இந்தியா, ஏப்ரல் 17 -- தமிழ்நாட்டில் இன்று காலை வரை நடந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தலைமை செயலகத்தில் நடைபெறுகிறது.

நேஷனல் ஹெரால்டு விவகாரத்தில் சென்னை சாஸ்திரி பவனில் முற்றுகையில் ஈடுபட்ட தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை உட்பட 214 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

நீதிமன்ற உத்தரவை அடுத்து விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோயிலில் பட்டியலின மக்கள் வழிபாடு செய்ய அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

பிரிவினையைத் தூண்டக்கூடிய கருத்துக்கோ, நடவடிக்கைகளுக்கோ கல்வி நிலையங்களில் இடமில்லை. இதில் எந்தவித சமரசங்களையும் நாம் ஏற்றுக்கொள்ள முடியாது என துணை வேந்தர்கள் மற்றும் பதிவாளர்கள் உடனான ஆலோசனைக் கூட்டத்தில் மு.க.ஸ்டா...