இந்தியா, பிப்ரவரி 24 -- தமிழ்நாடு முழுவதும் இன்று காலை வரை நடைபெற்ற முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

20 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் மருந்துகளை வழங்கும் முதலமைச்சர் மருந்தகங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை சிறைபிடித்த இலங்கை கடற்படையை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தம் தொடங்கி உள்ளனர். 700க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள், கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் படகுகளை கரையோரம் நிறுத்தி வைத்து உள்ளனர்.

பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார். சாம்பியன்ஸ் கோப்பையை வெல்ல இதே வேகத்தோடு செயல்படுங்கள், சதம் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்ட ...