இந்தியா, ஏப்ரல் 4 -- தமிழ்நாட்டில் இன்று காலை வரை நடைபெற்ற முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

2024-25ஆம் கல்வி ஆண்டுக்கான 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் இன்று தொடங்குகின்றன. தமிழ்நாடு முழுவதும் உள்ள 83 மையங்களில் இப்பணிகள் நடைபெற உள்ளன. சுமார் 46,000 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

நாடாளுமன்ற மாநிலங்களவையில் வக்ஃப் வாரிய திருத்த சட்டமசோதா நிறைவேறிய நிலையில் தமிழக எம்பிக்களில் ஜி.கே.வாசன் மட்டும் ஆதரவாகவும், மற்ற எம்பிக்கள் எதிராகவும் வாக்களித்தனர். அன்புமணி ராமதாஸ் அவை நடவடிக்கைகளில் பங்கேற்கவில்லை.

தேர்தல் மேகங்கள் சூழல் சமயத்தில் தனது இருப்பை காட்டிக் கொள்ள கருத்து சொல்லி இருக்கிறார். எம்ஜிஆர் தொண்டன் என கூறிக் கொள்ளும் சைதை துரைசாமி கட்சி பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டாரா...