இந்தியா, மார்ச் 16 -- தமிழ்நாட்டில் இன்று காலை வரை நடைபெற்ற முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

அரசமைப்பு சட்டத்தின் அடிப்படை கட்டமைப்புகளின் ஒன்றான கூட்டாட்சி தத்துவம் பாதிக்கப்படும் நிலை உள்ளது. மாநில அரசுகளின் சுய சார்புத் தன்மை உறுதி செய்யப்பட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.

எந்த பாதை சரியாக இருக்கிறதோ, அந்த பாதையில் நான் சென்று கொண்டு இருக்கிறேன். என் லட்சியம் உயர்வானது. என் பாதை தெளிவானது. வெற்றி முடிவானது. சில வேடிக்கை மனிதர்களை போல் நான் விழுந்து விடமாட்டேன் என அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேச்சு.

செங்கோட்டையன் பொது வெளியில் இது போல் நடந்து கொள்வது அநாகரீக செயல். தொண்டர்களால் இயங்கும் அதிமுகவில் ஒரு சில கசப்பும், கருத்து வேறுபாடுகளும் இருக்கத்தான் செய்யும். அதிமுகவை விட்டு கருத்து வேறுபாட்டால் போனவர்க...