இந்தியா, ஏப்ரல் 6 -- தமிழ்நாட்டில் இன்றைய நாளின் முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

இலங்கை பயணத்தை முடித்துக் கொண்டு இன்று பகல் 12 மணிக்கு ராமநாதபுரம் வரும் பிரதமர் நரேந்திர மோடி பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைக்கிறார். பின்னர் ராமநாதசுவாமி ஆலயத்தில் வழிபாடு நடத்துகிறார்.

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி ஆலயத்தில் பகல் 12.45 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி தரிசனம் செய்ய உள்ளதால் இன்று காலை 8 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை தரிசனத்திற்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டு உள்ளது.

7,750 கோடி மதிப்பில் வாலாஜா பேட்டை - ராணிப்பேட்டை, விழுப்புரம் - புதுச்சேரி உள்ளிட்ட 4 வழிச்சாலை திட்ட பணிகள், பூண்டியாங்குப்பம்- சட்டநாதபுரம், சோழபுரம்-தஞ்சை ஆகிய 4 வழி சாலை பணிகளுக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார்.

பிரதமர் மோடி கச்சத்தீவை மீட்டுத் தந்து, இலங...