இந்தியா, மார்ச் 22 -- தமிழ்நாட்டில் இன்றைய நாளின் முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

மக்களவை தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக சென்னையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் கேரளா, தெலங்கானா, பஞ்சாப் முதலமைச்சர்கள் மற்றும் பிறமாநிலங்களில் இருந்து அரசியல் கட்சி பிரதிநிதிகளும் பங்கேற்கின்றனர்.

சென்னையில் நடைபெறும் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டுக் குழு கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியும் பங்கேற்கிறது.

மக்களவை தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் ஆங்கிலத்துடன் அந்தந்த மாநிலங்களின் தாய் மொழியிலும் தலைவர்களின் பெயர் பலகை இடம்பெற்று உள்ளது.

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான தமிழ்நாடு அரசின் கூட்டு நடவடிக்கை குழுக் கூட்டத...