இந்தியா, மார்ச் 20 -- தமிழ்நாட்டில் இன்று காலை வரை நடைபெற்ற முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

கவரைப்பேட்டை-பொன்னேரி இடையே பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளது. மூர் மார்க்கெட் - சூலூர் பேட்டை, கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் ரயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

அரசு போக்குவரத்துக்கழத்தில் காலியாக உள்ள 3274 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களுக்கு நாளை முதல் ஏப்ரல் 21ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்ப்பட்டு உள்ளது.

கள்ளக்குறிச்சி விஷ சாராய மரண வழக்கில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட காவலர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்பட்டு உள்ளது. கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர் கலால் ஆய்வாளர்கள் கவிதா பாண்டி செல்வி ஆகியோர் விருத்தாசலம் மற்றும் மங்கலம் பேட்டை ஆய்வாளர்களாக நியமனம்.

சாலைகளில் மக்கள் நடமாட முடியாத அளவு...