இந்தியா, பிப்ரவரி 26 -- தமிழ்நாட்டில் இன்று காலை வரை நடைபெற்ற முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

தமிழக வெற்றிக் கழகத்தின் 2ஆம் ஆண்டு தொடக்க விழா மாமல்லபுரம் அருகே உள்ள பூஞ்சேரியில் இன்று நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் ஜன்சுராஜ் கட்சித் தலைவரும், தேர்தல் வியூக வகுப்பாளருமான பிரசாந்த் கிஷோரும் கலந்து கொள்கிறார். தேர்தல் பயணம் தொடர்பான அறிவிப்பை விஜய் வெளியிடுவார் என தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை நீலாங்கரையில் உள்ள நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் வீட்டில் காலணி வீசிய கேரளாவை சேர்ந்த இளைஞரை விசாரணைக்காக போலீசார் அழைத்து சென்றனர்.

வாக்கு வங்கிக்காக சாதி சீர்கேடுகளை எதிர்க்க அஞ்சும் நயவஞ்சகர்களுக்கு #GetOut என தவெக ஆண்டு விழாவில் பேனர் வைக்கப்பட்டு உள்ளது. புதிய கல்விக் கொள்கை, மும்மொழித் திட்ட திணிப்பிற்கு எதிராக போராட உறுதி...