இந்தியா, பிப்ரவரி 27 -- தமிழ்நாட்டில் இன்று காலை வரை நடைபெற்ற முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

பாரதநாட்டில் ஆன்மீகம் என்பது தமிழ் பண்பாட்டை குறிப்பிடாமல் நிறைவு பெறாது. தமிழ் பண்பாட்டில் சிவபெருமானுக்கு என்று தனி வழிபாடும், இடமும் உள்ளது என ஈஷா சிவராத்திரி விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு.

போதை பொருள் புழக்கம் உள்ளிட்டவை குறித்து கோவை சரவணம்பட்டி அருகே 12 ஆண்கள் தங்கும் விடுதிகளில் 30க்கும் மேற்பட்ட போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ராமேஸ்வரம் மற்றும் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த 27 மீனவர்கள், இலங்கையிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர். தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள், சென்னை விமான நிலையத்தில் மீனவர்களை வரவேற்று, அரசு ஏற்பாடு செய்த வாகனங்கள் மூலம் அவர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்ப...