இந்தியா, ஏப்ரல் 3 -- தமிழ்நாட்டில் இன்று காலை வரை நடைபெற்ற முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இன்று முதல் வரும் 5ஆம் தேதி வரை 7 முதல் 11 செ.மீ வரை மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்து உள்ளது.

வெயில் கொளுத்தி வரும் நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.

டெல்லியில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை அதிமுக் எம்.பி. தம்பிதுரையும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சி.வி.சண்முகமும் சந்தித்து பேசி உள்ளனர்.

ஆழித் தேரோட்டத்தையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், ஏப்ரல் 7ஆம் தேடி அன்று நடைபெறவிருந்த 1-5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர...