இந்தியா, மார்ச் 14 -- தமிழ்நாட்டின் இன்றைய தினத்திற்கான முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ.!

2025-26 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையை இன்று காலை 9.30 மணிக்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறார். நாளை காலை வேளாண் பட்ஜெட்டை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தாக்கல் செய்கிறார்.

அரசு ஊழியர்களுக்கான அறிவிப்பு, மகளிர் உரிமைத் தொகை பயனாளிகள் எண்ணிக்கை உயர்வு, மகளிர் விடியல் பயண பேருந்துகளின் எண்ணிக்கை அறிவிப்பு உள்ளிட்ட அறிவிப்புகள் இன்றைய தினம் தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட்டில் இடம்பெற வாய்ப்பு.

தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ள லோகோவில் இந்திய ரூபாய் குறியீட்டை குறிக்கும் Rs. -க்கு பதிலாக தமிழ் எழுத்தான 'ரூ' என்ற எழுத்த...