இந்தியா, மார்ச் 13 -- தமிழ்நாட்டில் இன்று காலை வரை நடந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2025-26ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படுகிறது. காலை 9.30 மணிக்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

எங்களிடமே வரி வசூலித்துவிட்டு எங்களை சிறுமைபடுத்துவதுதான் நாகரீகமா?; அநாகரீகத்தின் அடையாளமே மத்திய அரசுதான் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்.

மேடையில் வீரவசனம் பேசும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்ன ஆட்சி செய்தார் என தன்னுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயாரா என முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சவால்.

மத்திய அரசு மீதான விமர்சனங்களை மறைப்பதற்கு கூட பெரியார் குறித்த சர்ச்சை கிளப்பப்படுகிறது. பெரியார் கூறியது வருத்தமெனில் மும்மொழிக் கொள்கையை திணிக்காமல் இருக்கலாமே என மத்திய நிதியமை...