இந்தியா, பிப்ரவரி 22 -- தமிழ்நாட்டில் இன்று காலை வரை நடந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

மனைவியிடம் இரட்டை அர்த்தத்தில் பேசியதாக சென்னையில் மளிகை கடை உரிமையாளர் சபரிநாதன் மீது தாக்குதல் நடத்திய பாமக நிர்வாகி சத்தியராஜ் மீது வழக்குப்பதிவு.

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் மீது 7 திருட்டு வழக்குகள் பதியப்பட்டு உள்ளன. வில்லா வகை வீடுகளை குறிவைத்து காரில் சென்று கொள்ளை அடித்ததாக ஞானசேகரன் வாக்குமூலம் அளித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் அதிருப்தி மாவட்ட தலைவர்கள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தைக்கு எதிராக மாவட்ட தலைவர்கள் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். பிரியங்கா காந்தியை 25 மாவட்ட தலைவர்கள் இன்று நேரில் சந்தித்து மாற்ற கோரிக்கை வைக்க உள்ளனர்...