இந்தியா, மார்ச் 21 -- தமிழ்நாட்டில் இன்று காலை வரை நடந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

மக்கள் தொகையை கட்டுப்படுத்தி சிறப்பாக செயல்பட்டு நாட்டின் வளர்ச்சிக்கு பங்களித்த மாநிலங்களுக்கு, தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் ஒன்றிய அரசு தண்டனை வழங்க கூடாது. இது மாநிலங்களை அவமதிக்கும் செயல் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.

தொகுதி மறுவரையறை தொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பை ஏற்று கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் பங்கேற்க கேரள முதல்வர் பினராயி விஜயன் சென்னை வருகை.அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் வரவேற்பு.

சென்னை பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயில் வழித்தடத்தில் பூந்தமல்லி பணிமனை - முல்லைத் தோட்டம் இடையே 2.5 கி.மீ. தூரத்திற்கு வெற்றிகரமாக சோதனை ஓட்டம் நடைபெற்றது. பூந்தமல்லி - போரூர் இடையே வரும் ட...