இந்தியா, மார்ச் 9 -- தமிழ்நாட்டில் இன்று காலை வரை நடைபெற்ற முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் இன்று மோதும் நிலையில், மெரினா, பெசண்ட் நகர் கடற்கரைகளில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் பெரிய திரைகளில் திரையிடப்படுகிறது.

சென்னையில் இன்று புறநகர் மின்சார ரயில்கள் சேவை ரத்தால் மாநகர போக்குவரத்துக் கழகம் இன்று சிறப்பு பேருந்துகளை இயக்குகின்றன. கடற்கரை- எழும்பூர், கோடம்பாக்கம் ரயில்நிலையங்களுக்கு இடையே தண்டவாளம் அமைக்கப்படுகிறது. இதனால் காலை 5.10 மணி முதல் மாலை 4.10 மணிவரை கடற்கரை - தாம்பரம் ரயில்கள் ரத்து.

லண்டன் அப்பல்லோ அரங்கில் இளையராஜாவின் முதல் சிம்பொனி இசை இந்திய நேரப்படி நள்ளிரவு 2 மணியளவில் அரங்கேற்றப்பட்டது. ராயில் பிலார்மோனிக் ஆர்கெஸ்ட்ராவுடன் இணைந்து...