இந்தியா, ஏப்ரல் 5 -- தமிழ்நாட்டில் இன்றைய நாளின் முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

2024-25ஆம் ஆண்டில் மற்ற மாநிலங்களை காட்டிலும் பொருளாதார வளர்ச்சி விகிதத்தில் 9.69% வளர்ச்சி உடன் தமிழ்நாடு புதிய உச்சத்தை எட்டி உள்ளதாக மத்திய அரசின் திட்ட அமலாக்கத்துறை கூறி உள்ளது.

ராமேஸ்வரத்துக்கு பிரதமர் மோடி நாளை வருகை தர உள்ளதை ஒட்டி சுமார் 3,500 போலீசார் மூன்றடுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தங்கம் விலை இன்று ஒரு சவரனுக்கு ரூ.720 குறைந்து, 66,480 ரூபாய்க்கும், ஒரு கிராம் 8,310 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஸ் குமார் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி போஸ், சென்னை மாவட்டத்தை கூடுதலாக ...