இந்தியா, ஏப்ரல் 16 -- டாப் 10 தமிழ் நியூஸ் 16.04.2025: இந்து முன்னணி நிர்வாகி கைது, நெல்லையில் தனியார் பேருந்து கடத்தல், தமிழில் மட்டுமே இனி அரசாணை உள்ளிட்ட முக்கிய செய்திகளை இன்றைய டாப் 10 நியூஸ் தொகுப்பில் சுருக்கமாக காணலாம்.

மத மோதலை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளத்தில் வீடியோ பதிவிட்ட பழனியைச் சேர்ந்த இந்து முன்னணி மாநில நிர்வாகி ஜெகன் என்பவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். மத மோதலை உருவாக்குதல், அமைதியை சீர்குலைத்தல், வதந்தி பரப்புதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பழனி போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவாரூரில் கடந்த 2014ம் ஆண்டு ராஜீவ் காந்தி நினைவு குடியிருப்பு திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கு அனுமதி வழங்க ரூ.10,000 லஞ்சம் வாங்கியபோது பிடிபட்ட நகராட்சி கட்டட ஆய்வாளர் நாகராஜனுக்கு, 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித...