இந்தியா, மார்ச் 19 -- தமிழ்நாட்டில் இன்று காலை வரை நடந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் வேலை நிறுத்தம் அறிவித்து உள்ள நிலையில், அரசு ஊழியர்கள் பணிக்கு வராமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டால், ஊதியம் கிடையாது என தமிழக அரசு எச்சரிக்கை.

திருத்தணியில் வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தையை வெறிநாய் கடித்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி.

மார்ச் 23ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் சென்னை - மும்பை அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்குகிறது. இன்று காலை 10.15 மணி முதல் ஐபிஎல் டிக்கெட் விற்பனை www.chennaisuperkings.com என்ற இணையதளத்தில் தொடங்கும்.

தருமபுரி ஆட்சியர் மற்றும் எஸ்.பிக்கு மிரட்டல் விடுப்பது போல் பேசிய ஆடியோ வெளியான நிலை...