இந்தியா, பிப்ரவரி 24 -- டாக்ஸிக்: சர்வதேச அளவில் பாராட்டைப் பெற்ற இயக்குநர் கீது மோகன் தாஸ் எழுதி இயக்கி 'ராக்கிங் ஸ்டார்' என ரசிகர்களால் அழைக்கப்படும் யாஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'டாக்ஸிக்'. இந்தப்படத்தின் டீசர் யாஷ்ஷின் பிறந்தநாளன்று வெளியானது. இந்த நிலையில் இப்படம், ஆங்கிலம் - கன்னடம் என இரு மொழிகளிலும் படமாக்கப்பட்டு இருப்பதாக படக்குழு தெரிவித்திருக்கிறது.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், 'டாக்ஸிக் படத்திற்கான எங்கள் தொலைநோக்குப் பார்வை, இந்திய ரசிகர்கள் மட்டுமல்லாது உலக ரசிகர்களையும் உள்ளிழுக்க வேண்டும் என்ற நோக்கத்தை கொண்டிருக்கிறது.

இந்தப்படத்தை கன்னடம் மற்றும் ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் பிரத்யேகமாக படமாக்க நாங்கள் உழைத்துள்ளோம். இது பல்வேறு மொழியியல் மற்றும் கலாச்சார பின்னணியில் உள்ள பார்வையாளர்களுக்கு ஒரு நி...