இந்தியா, பிப்ரவரி 25 -- ஜோதிகா: ஜோதிகாவின் வெப் தொடரான 'டப்பா கார்டெல்' வருகிற பிப்ரவரி 28ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. இதனை புரோமோட் செய்யும் வேலைகளில் ஜோதிகா பிசியாக சுற்றிக்கொண்டிருக்கிறார்.

அந்த புரோமோஷனின் ஒரு பகுதியில், ஜோதிகா பாலின வேறுபாடு குறித்து பேசி இருக்கிறார். இது குறித்து அவர் பேசும் போது, ' இது எனக்கு அன்றாட விஷயமாக தெரிகிறது. நான் ஒரு சூப்பர் ஸ்டாரை திருமணம் செய்து கொண்டேன். அதன் காரணமாக அதனை நான் இப்போது வரை எதிர்கொண்டு வருகிறேன். இது நேர்காணல்களின் போது கூட நடக்கிறது.

நான் சூர்யாவை கல்யாணம் செய்து கொண்டதால் அதிர்ஷ்டசாலியாக உணருகிறேன் என்று கூறினால், சூர்யா உண்மையில் மிகவும் நல்லவர் என்கிறார்கள். ஆனால், அவர் நல்லப்பெண்ணை திருமணம் செய்து கொண்டதால் அதிர்ஷ்டசாலியாக உணருகிறேன் என்று கூறினால், மனை...