இந்தியா, மார்ச் 1 -- ஜோடி ஆர் யூ ரெடி சீசன் 2: மார்ச் 1 ம் தேதி நிகழ்ச்சி, 90களில் ரசிகர்களை கொண்டாட்டம் போட வைத்த, பாடல்களின் சுற்றாக வலம் வந்தது. போட்டியின் துவக்கத்திலேயே, நடுவர்களுக்கு தனித்தனி எண்ட்ரி வைத்தனர். முதலாவதாக 90களின் கனவுக்கன்னி ரம்பா எண்ட்ரி ஆனார். அவர் நடித்த படங்களில் இருந்து சிறந்த பாடல்களை ஒலிபரப்பி, அவரும், தொகுப்பாளர் ரியோவும் ஆட்டம் போட்டு, ரசிகர்களை உற்சாகப்படுத்தினர்.

மேலும் படிக்க | அஜித் வருகையால் தள்ளிப் போகிறதா 'இட்லி கடை' திரைப்படம்

எண்ட்ரி முடித்தபின் பேசிய ரம்பா, '90களில் மறக்க முடியாத நிகழ்வுகள் பல இருக்கிறது. இன்று போல, அன்று சமூக வலைதளங்கள் இல்லை. எனக்கு வாரந்தோறும் மூட்டை மூட்டையாக லெட்டர் வரும். அவற்றை படிப்பதே அலாதி. அதிலும் ஒரு ரசிகர், என்னுடைய கலெக்‌ஷன்களை சேகரித்து ஆல்பமாக அனுப்புவார்...