இந்தியா, பிப்ரவரி 24 -- சென்னையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ளாதது ஏன் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்து உள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77ஆவது பிறந்தநாள் விழா சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கொண்டாடப்பட்டது.

கட்சி அலுவலகத்தில் உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்திய எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதாவின் 77-ஆவது பிறந்தநாள் விழா சிறப்பு மலரை வெளியிட்டார். பின்னர் 77 கிலோ எடை கொண்ட கேக் வெட்டிய அவர், ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற மற்றும் உள்ளாட்சி ...