இந்தியா, பிப்ரவரி 24 -- சென்னை போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லத்தில் நடைபெற்ற முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபாவின் அழைப்பை ஏற்று இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக ரஜினி தெரிவித்தார்.

புரட்சித் தலைவி அம்மாவின் 77ஆவது பிறந்தநாளை போயஸ் கார்டனில் கொண்டாடுகிறோம், அவசியம் வரவேண்டும் என்று அழைத்தனர். 1977இல் அவர்களை பார்க்க வந்தேன். இருவரும் சேர்ந்து நடிப்பதாக ஒரு திட்டம் இருந்தது, என்னை பார்க்க வரசொன்னார்கள். இரண்டாவது முறை ராகவேந்திர திருமண மண்டப திறப்பு விழாவுக்காக அழைக்க வந்தேன். மூன்றாவது முறை என் மகள் திருமணத்திற்கு அழைப்பிதழ் தர வந்தேன். இது நான்காவது முறை. அவர்கள் இங்கே இல்லை என்றாலும் கூட, அவர்கள் நினைவு எப்போதும் எல்லோர் மனதிலும் இருக்கும். அவர்கள் வாழ...