இந்தியா, மே 23 -- விஷ்ணு பகவானுக்காக கொண்டாடப்படும் எத்தனையோ விழாக்களில் வைகுண்ட ஏகாதசி மிகவும் பிரசித்தி பெற்ற திருவிழாவாக திகழ்ந்து வருகிறது. வைகுண்ட ஏகாதசி போலவே ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய சர்வ ஏகாதசி மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது. இந்த திருநாளில் ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து வழிபாடு செய்வார்கள்.

அதே சமயம் இந்த ஏகாதசி திருநாளில் மற்றவர்களுக்கு உணவு வழங்குவது மிகப்பெரிய புண்ணியத்தை பெற்றுக் கொடுக்கும் என கூறப்படுகிறது. மேலும் வீட்டில் புளியோதரை அல்லது தயிர்சாதம் செய்து அதனை பெருமாளுக்கு நெய்வேத்தியம் படைத்து பிறகு அருகில் இருப்பவர்களுக்கு வழங்குவது குடும்பத்தில் வளத்தை சேர்க்கும் என்பது ஆச்சாரியார்களின் வாக்காக விளங்கி வருகின்றது.

ஏகாதசி விரதத்திற்கு எப்போதுமே தனித்துவமான மகிமை உண்டு திருப்பாற்கடலை கடைந்து அதிலிருந்து அமிர்தம் எட...