இந்தியா, ஜூன் 1 -- இந்திய மருந்து உற்பத்தி துறையின் சந்தை மதிப்பு-2023-24 நிதியாண்டில்-50 பில்லியன் அமெரிக்க டாலர்கள். அது 2030ல் 120-130 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது.

2024ல் "மூலக்கூறு அடிப்படையிலான மருந்துகளின்-Generic Medicines-சந்தை மதிப்பு-24.91 பில்லியன் அமெரிக்க டாலர்கள். அது 2030ல் 35.62 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது.

மருந்து துறையின் ஆண்டு வளர்ச்சி-6.02 சதவீதமாக உள்ளது. இந்திய சந்தையில், மருந்து தேவையில் 70-80 சதவீத பங்களிப்பை மூலக்கூறு அடிப்படையிலான ஜெனிரிக் மருந்துகளே பூர்த்தி செய்து வருகின்றன. சில குறிப்பிட்ட துறைகளில் 100 சதவீதம் பங்களிப்பும் ஜெனிரிக் மருந்துகளே பூர்த்தி செய்து வருகின்றன.

இந்திய ஜெனிரிக் மருந்தின் உற்பத்தியில் 20 சதவீதம், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய...