இந்தியா, மே 10 -- தன்னுடைய இசை நிகழ்ச்சிக்கான கட்டணம் மற்றும் ஒரு மாத சம்பளத்தை கொடுப்பதாக இளையராஜா தன்னுடைய எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.

மேலும் படிக்க | இளையராஜாவிடம் ஆசி வாங்கிய 6 போட்டியாளர்கள்.. சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் இறுதி போட்டி! - எங்கே நடக்கிறது தெரியுமா?

இது குறித்து தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருக்கும் அவர், '""VALIANT" - இந்த ஆண்டின் தொடக்கத்தில், நான் எனது முதல் சிம்பொனியை இசையமைத்து பதிவு செய்து, அதற்கு "Valiant" என்று பெயரிட்டேன்; அப்போது, பஹல்காமில் அப்பாவி மக்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக மே மாதத்தில் நமது உண்மையான ஹீரோக்கள், நமது வீரர்கள் துணிச்சல், தைரியம், துல்லியம் மற்றும் உறுதியுடன் செயல்பட வேண்டும் என்பதை அறிந்திருக்கவில்லை.. நமது தன்னலமற்ற துணிச்சல் மிக்க வீரர்க...