இந்தியா, ஜூன் 13 -- இயக்குநர் ராம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் பறந்து போ படம் ஜூலை 6 அன்று வெளியாக இருக்கிறது. இந்தப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் அண்மையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மாரிசெல்வராஜ் கலந்து கொண்டு பேசினார்.

அவர் அங்கு பேசியதாவது, 'நான் அண்மையில் ஜப்பானுக்கு சென்றிருந்தேன். அப்போது, ராம் சார் எனக்கு அடிக்கடி போன் செய்து ஜப்பானில் அந்த இடத்திற்கு செல், இந்த இடத்திற்கு செல் என்று சொல்லிக் கொண்டே இருப்பார். நான் சென்ற இடங்களைப் பற்றியும் கேட்டுக்கொண்டிருந்தார்.

இந்தப்படத்தில் இருந்து ஒரு பாடல் வெளியான போது அது குறித்து நான் அவருடன் பேசிக்கொண்டே காரில் வந்து கொண்டிருந்தேன். அப்போது யுவானின் (மகன்) பாட்டி எனக்கு போன் செய்து யுவானை காணவில்லை என்று அதிர்ச்சி கொடுத்தார்.

உடனே, எனக்கு அந்த ஹோட்டலில் அவன் எங்கு ச...